ஒரு துளி ஒரு நதி

ஒரு துளி ஒரு துளி
ஒரு துளி ஒரு நதி

இலையின் மன்றத்தில் ஒரு துளி
முகிலின் வர்ணத்தில் ஒரு துளி
தென்றலின் குளிரில் ஒரு துளி
மண்ணில் விழுந்த மழை துளி

பொன்மலை உச்சியில் அடித்த துளி
பச்சிலை நுனியினில் வடிந்த துளி
செங்காட்டு பூமியில் சிவந்த துளி
ஒருகுலச் சேர்ந்து பிறந்த நதி

நதியில் எடுத்தக் குடநீரில் பிறந்தான்
   ஈரநதியின் மடியினில் வளர்ந்தான்
வளம் புரண்டு வரும் புனல்
   மடியில் உழவனானான், வளை
வெடுத்து வரும் நதி வனப்பில்
   புலவனானான், பிறந்து வளர்ந்து உழைத்துப்பாடி இறுதியில் தன் முடிவையும்
   கொள்கிறான் அந்நதியின் கரையிலே..

சொட்ட சொட்ட கிளையில் அடிக்கும்
   மழையின் ஓசையில்
கண்ணுக்கு இதமான கார் வான
   மென்மை யொளியில்
அடித்தண்டுக்கு இனிய குளிர் செய்யும்
   பசுஞ் சோலையில்
மூளைகொண்ட அடவுகளை நெட்டி எடுக்கும்
   இயற்கையின் மடியில்
இன்பம் களித்து வாழ்ந்திடவே மண்ணுயிர்
   என்பதை மறவாம்

நதியினால் வளர்ந்த மரத்தினால் மலர்ந்த
    மழையினால் உயிர்த்த நதி!
இம் மதிகொண்ட ஒன்றாம் வகுப்பும்
   ஊட்டும் – உயிர்பாடி மண்
தாய்க்கு ஓர்கோடி ஊர்கூடி செய்யென்ற
   உணர்வுகளை, அனால் இம்மதியன்று 
நிம்மதிதே டும்கதியென்று பேணிய வேறுமதியால்
   தொலைத்தோம் – அவ்வுணர்வுகளோடு நதிகளையும்!

இப் பொழுது, இப்பொழுதாவது
அவ்வுணர்களை மீட்போம்
நதிகளை மீட்போம்
ஏது செய்ய இயலும் தன்னால்
என்றெண்ணாமல்
இருளில் ஒழிந்து கொண்டிருக்கும் 
வழிகளுக்கு ஒளி கொடுக்கும்
சத்குருவுடன் இணைவோம்
நதிகளை மீட்போம்
ஒரு துளி மீட்போம்
ஒரு நதி மீட்போம்
நம் சேய் வாழ
தாயை மீட்போம்
நதியை மீட்போம்!

Advertisements

வ வா வி வொலி(மொழி)

வான வஞ்சி வாவியென வழிந்தோடும்
வண்ணம் விரிந்த வனமே வியக்கும்
வனசம் விழுங்கிய வன விழியின்
வனப்பில் விழுந்த வித்தார வித்தகன்

வித்தகனுள் விதைந்த வேட்கை விரகமான
விகாரம், வலியாக வதைக்கும் வினையொழியும்
விசையாய், வாரானை வேளையில் வில்லாக வந்தடித்த விளியினில் விலைந்த வாஞ்சை

விஞ்சு வொளி வுடுத்தி வந்தாளவள்
வாரண வனம் வணங்கிய வண்ணம்
வாணன் விரல் வீற்று, வானம்
வேழமொலித்து விருந்தமிழ்தம் வடிக்க, வேள்விகண்
வலம் வர விழாவான விவாகம்!!!

உயிரே.. உயிரே..

நள்ளிரவில் தொலைத்த தூக்கம்
மத்தியில் உயிர் கசியுமொரு சத்தம்

பூந்தெழிலே உன் மடியில்லாமல்
இந் நிலவொளி எதற்கு
கயற்கண்ணவளே உன் கண்விழி இல்லாமல் இவ் விண்வெளி எதற்கு
சிதம்பர சுந்தரியே உன் அழகின் அணல் இல்லை இவ்விரவின் குளிர்தான் எதற்கு
இந்திர சந்தினியே உன் புடவை தீண்டலும் இல்லையேல்
பருவ காற்றும் எதற்கு
நித்திலமே உன் முகவரி இல்லாத எமக்கு
பேனா எதற்கு வானின் நீலம் தான் எதற்கு
அந்தி குமரியே உன் தோற்றம் தான் இல்லா வாழ்வில்
மெட்டும் சந்தமும் எதற்கு எதற்கு

உன் காட்சி தான் இல்லயேல்
மாய்ச்சி இல்லையே
பின் மகரந்தம் ஏந்தும் மலர்கள் தான் எதற்கு

இவ் விரவின் கருமை கொண்ட 
உன் கூந்தல் தான் இல்லையே
பின் பட்டுத் தென்றல் முட்ட
மொட்டு விரிந்த பூக்கள் தான் எதற்கு
உன் கூந்தல் என் மீசை சேராமல்
பூக்கள் மண மாலை சேர்வது தான் எதற்கு

அபிநய ஆயுர்வதியே, கௌசள்ய தேவியே
உன் பூந் தேக வெண்ணொளி இல்லா
இரவின் ஜூன் மாத நிலவொளி எதற்கு
ரதி ராதையே, ருக்மணியே
உன் கண் விழியின் வழி வரும்
காதல் விளி காணாத என் வாழ்வில்
காற்று நுழைவதெதற்கு

காஞ்சிப் பட்டு உடுத்தி மீனாட்சி நீ ஒருத்தி
நடவாத நிலத்தில் பொன் மாலை பொழுது எதற்கு
அந் நிலம் போடும் பச்சையலைகள் தான் எதற்கு

குச்சி ராக்கம்மா பச்சை தாவனியில்
என் வீட்டு அகலை நீ ஏற்றும் காட்சி இல்லையே
பின் கிழக்கே மனக்கும் நந்தவனம் மட்டும் எதற்கு
புன்தலை புன மகளே உனை காணா இப் பிறவில்
வாழ்வும் சாவும் எதற்கு எதற்கு

பெண்ணே, நீ இல்லாமல்
சங்கத் தமிழும் கசக்குதடி
வஞ்சிக் கொடி, நீ வரும் வழி பார்த்து
தமிழ் ஏந்தி உனை
காண கிடக்கின்றேன்!

ஆசை சந்தம்

தங்க வெண்மையே!
தாரகை பெண்மையே!

வான வீதியில் உலா வரும் முழு மதியோ நீ
கணா வெளியில் நடந்து வரும் காமன் ரதியோ நீ
நிலவு மழையில் முளைத்த மல்லிகைக் குளமோ நீ
இரவு ஆழியில் படர்ந்த காரிகைக் கூட்டமோ நீ
பனி மலையின் தேகமோ நீ
தேகம் மேல் பூசிய மஞ்சள் ஒளியோ நீ
மஞ்சள் மேல் கட்டிய செம்புடவையோ நீ
அத்தேகம் மேல் முகில் கொண்ட மோகமோ நீ
இந்த இனிய உணர்வின் கண்துளியோ நீ!

காதல் காஞ்சனையோ காவிரி சரஸ்வதியோ

மழலை மடியில் நடை பழகும் 
தமிழின் தாய் நீயோ
மண்ணின் மடியில் பகைவனை வெல்லும்
வீரத்தின் தாரம் நீயோ

நெல்லை பிறந்த ரோஜாவோ
வெள்ளை அணிந்த லீலாவோ

என் உயிர் மொழி தேடும் சந்தம் நீயோ
என் உடல் விழி தேடும் பந்தம் நீயோ
மதி விரும்பும் கலை செல்வியோ
மஞ்சம் ஏங்கும் அழகு சுந்தரியோ

என் பேனா மை கொண்டு தேடும் கவிதை நீயே..
என் அணுக்கள் உயிர் கொண்டு தேடும் காதல் நீயே..
காதல் கவிதை நியே!

குருவின் மடியில்

உழுத நிலம் போல சடை கொண்டவனே
உழுது ஏரான அம்மூன்றாம் பிறையையே அணியாய் கொண்டாய்

வெள்ளி யொளி மழையில்
வெள்ளியங்கிரி மடியில்
இப் பௌர்னமி இரவில்
குருவின் அனைப்பில்
ஆதி யோகி உனை
முழு மதியின் மடியில்
ஆதி யோகி உனை
காண எம் குரு அருளிய இவ்வரம்
வாழச் சொன்னதே
இவ்வுயிரை வாழச் சொன்னதே
வாழ்வில் உனை உணரச் சொன்னதே
உணர்ந்த பின்னே இறக்கச் சொன்னதே

இந் நிலவொளியில் 
அரியும் பிர்ம்மனும்
தேடிக் காணாததை
காண வழி வந்ததோ

இப் பிரம்மம் உருவான
வழியும் இதுதானோ
இவ்வாழ்வின் அர்த்தம் இதுதானோ
உயிரின் உச்சம் இது தானோ
முக்தியை நோக்கியபடி
உன் கழுத்தில் நின்ற 
நாகம் என் உயிர்
உனை அடையும் வழி சொன்னதே

சேராய் இருந்த உயிரை
கங்கை வழி முளைத்த அருவி நீராக்கினாய்
எதை சுவைத்து கண்ணை
கல்லாய் உறைத்தாய்
அக் கண்வழி எதை அளித்து
எம் உயிரை உறைத்தாய்
எம் உயிரின் தாய் நீயே
எந்தாய் ஈசனே!!

என் காதல் கேளாயோ

தமிழ் நிலத்தில் 
வரப்பு மேட்டில்
உன் அழகை அள்ளி
குடத்தில் ஊற்றி
உன் இடையில் சுமந்து
நீ நடக்கயில்
என் சொல்லேர்
ஏனோ கூடியது கூர்மை
இச் சொல்லேர் உழவனுக்கு
ஒரு படி காதல் சேர்த்து
வடித்த சோரும்
குழம்பாக உன் அழகும்
பருகும் வரம் தாராயோ!

மேகத்தின் துளியிலும்
உன் கொலுசின் ஒலியிலும்
உயிர் வெடித்த முலை
சூரியனின் ஒளியிலும்
உன் அழகின் கதகதப்பிலும்
ஆள் ஆன பயிர்
தென்னை தென்றலிலும்
உன் புடவை தீண்டலிலும்
செழித்த சொற்மணி
சிந்தா மணிகளாய் அறுவடை
செய்து என் உயிர் வழி
எடுத்த நாரில் கோர்த்த மாலை
நம் மண மாலையாக உதவாயோ!

மாலை கொடுத்த புல்லை
மெட்டியாக உன் காலில் மாட்டி
தென்மலை பாறையில்
என் காதல் கொண்டு உராய்த்து
எடுத்தச் செந்தூரக் குங்குமத்தை
உன் நெற்றியில் நான் இட
மனைவியாக என் அருகில் நில்லாயோ!

என் பாடல் உன் செவி கேளாயோ!
கேளாயோ! என் காதல் கேளாயோ!

காதல் கண்ணவா

சமயல் வேளையில் என்
சேலை விளிம்பில் உன்
விரல்களால் என் எண்ணம் சிதற
பொங்கிய பாலின் நுரையில்
பிம்பம் ஆன நம் காதல்

உடை மாற்றும் இடைவேளையில்
உன் நெஞ்சில் என்
உடல் சாய என் 
கழுத்தில் உன் முகம்
சேர முன்னிருந்த
கண்ணாடியில் பதிவான
நம் காதல்

உன் முதல் காதலி
வான வெளியில் உன்
தலை பின் ஒளிர்கயிலும்
என் வயிற்று வெளியில்
எந்த நிலவை கண்டாயோ
அந்த ஈர இரவில்
நனைந்த நம் காதல்

உன் தோளில் நான்
சாய என் உதடில்
சிறு பாடல் ஊற
தாளாட்டும் அந்த
ஊஞ்சலில் ரீங்காரம்
போடும் நம் காதல்

உன் மடியில் நான் அமர
என் கூந்தல் உன் மீசையாக
நம் ஐயில் தாமியாகிய
நம் காதல்

ஊரையே கட்டி போடும்
என் அத்தையின்
மீன் குழம்பை சுவைத்த
உன் நாவில் சுளன்ற
வெற்றிலை
என் தொண்டையில்
இறங்கும் பொழுது
என் வயிற்றில் உண்டான
நம் காதல்

நான் என்ற என் புடவையும்
நீ என்ற உன் வேஷ்டியும்
கட்டி வலம் வந்த அக்னியும்
அவ்விரண்டும் அவிழ்ந்து
நம் உயிர் சேர்ந்த அக்னியும்
என் முதிர்னிலை முடிந்து
தண்ணீர் கரையில்
என் உடல் மேல் எரியும்
பொழுதிலும் மாயாதே
நம் காதல் நம் காதல்